JXG (ஜனசக்தி குழுமம்) நிறுவனத்தின் முதன்மை ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி லைஃப், Great Place To Work® Sri Lanka வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டிற்கான இலங்கையின் 50 சிறந்த பணியிடங்கள் (Sri Lanka's 50 Best Workplaces™) பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
251 முதல் 500 பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களை உள்ளடக்கிய நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் ஜனசக்தி லைஃப் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
வலுவான பணியிடக் கலாசாரம், உள்ளடக்கத்தன்மை, பணியாளர் நலன், ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கான அங்கீகாரமாக இது அமைந்துள்ளது.
இந்த மதிப்பீடு Great Place To Work® இன் Trust Index™ Employee Experience Survey மற்றும் Culture Audit™ ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. 2025ஆம் ஆண்டில் Great Place To Work Certified™ அந்தஸ்தையும் 88% Employee Trust Index™ பெறுபேற்றையும் பெற்றிருந்த ஜனசக்தி லைஃப், தொடர்ந்து இவ்வாறான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே, இந்த அங்கீகாரம் நிறுவனத்தின் வலுவான பணியிடக் கலாசாரத்தையும், பணியாளர்களின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக தெரிவித்தார்.
